என்றென்றும் அன்புடன் உங்கள் SAMSUDEEN.M.S.

Saturday, March 27, 2010

சரியலிச கவிதை

என்னை பற்றி நான் சொன்ன எல்லாவற்றுள்ளும்
என்ன மிஞ்சியிருக்கிறது ?
காலியான அலமாரிகளில் நான் பொய்களை
பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்துள்ளேன்.

ஒரு பயனற்ற கப்பல்
என் குழந்தை பருவத்தை இணைக்கிறது
என் விளையாட்டுகளை என் களைப் புடன்
என் கனவுகளை நோக்கிய பயணமாக
புயலை என் இரவுத் தனிமையின் உச்சிக்கு
விலங்குகள் அற்ற தீவை நான் விரும்பும் விலங்குகளுடன்
இங்கும் எங்கும் உண்மையான ஒரே பெண்ணிற்கு
இல்லாதவர்களுக்கு கனவுகளை தந்து கொண்டிருக்கும்
என்னை நோக்கிக்
கைகளை நீட்டி இருக்கும்  அவளுக்கு
புன்சிரிப்புடன் நான் வரவேற்புரைக்கிறேன் .

நான் அறியாமை பற்றி சிந்திக்கவில்லை
அறியாமை அரசோச்சுகிறது
ஆம் எனக்கு எல்லாவற்றிலும் நம்பிக்கை இருந்தது
எல்லாவற்றிலும் அவ நம்பிக்கை வந்து விட்டது

வாழ்க்கையில்
மறதி நிலையில்
உறக்கத்தில்
வ்லிவில்
மெலிவில்
என்னை இனி எவரும் அறியார்
என் பெயர் என் நிழல்
இரண்டிலும் ஓநாய்கள் .


நன்றி : எழுவர்சின் ஒரு சர் ரியலிச  கவிதை ' ஒரு நம்பிக்கையற்று கிடக்கும் நேரத்தை பற்றி "

1 comment:

  1. வெல்கம் டூ தி பிளாக் வொர்ல்ட்.

    பிளாக் டிசைன் அட்டகாசம். சூப்பரா இருக்குடா.

    கவிதைக்கும் எனக்கும் ரொம்பவே துாரம். ஆனாலும் நல்லா இருக்கு.

    பிளாக் ஃபாலோயர் ஆயிட்டேன்.

    ReplyDelete