என் கண்களை படிக்க தெரியாதவளாய்
யாசகனைப் போல் முதுகின்
பின் நிற்கும்
என் முகம் உணராதவளாய்
என் மொழியில்
தகித்திருக்கும் அர்த்தம புரியாதவளாய்
இருக் கின்ற உன்னிடம்
திக்க்கற்றவனாய் நிற்கிறேன்
இரத்தம் கசிந்த்திடு மென்
வலியை கடத்தத் தெரியாமல்
நன்றி : திரு அழகிய பெரியவன் அவர்கள்
என்றென்றும் அன்புடன் உங்கள் SAMSUDEEN.M.S.
Wednesday, June 2, 2010
Wednesday, March 31, 2010
வைதீஸ்வரன் கவிதை
அவர்கள் ஊமைகள் என்பதால்
பேசாமல் இருந்தேன் ...
ஆனால் அவர்கள் தமக்குள்
ஆனந்தமாகப் பேசிக்கொண்டே
போனார்கள்.
நன்றி: திரு. வைதீஸ்வரன்
N.சத்தியமூர்த்தி கவிதை
இத்தனை காலம்
தவித்துக் காத்திருந்தவளும் வந்தாள்.
எதிர்பார்த்த எதுவும்
நிகழக் காணோம்
சில முடிச்சுகள் அவிழ்ந்த போதும்
புதியவைகள் இருக்கிக் கொண்டன.
முகம் திருப்பி விடை பெற்றோம்
வேறெங்கோ மூச்சு விட.
நன்றி: N. Sathiyamoorthy
Saturday, March 27, 2010
சரியலிச கவிதை
என்னை பற்றி நான் சொன்ன எல்லாவற்றுள்ளும்
என்ன மிஞ்சியிருக்கிறது ?
காலியான அலமாரிகளில் நான் பொய்களை
பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்துள்ளேன்.
ஒரு பயனற்ற கப்பல்
என் குழந்தை பருவத்தை இணைக்கிறது
என் விளையாட்டுகளை என் களைப் புடன்
என் கனவுகளை நோக்கிய பயணமாக
புயலை என் இரவுத் தனிமையின் உச்சிக்கு
விலங்குகள் அற்ற தீவை நான் விரும்பும் விலங்குகளுடன்
இங்கும் எங்கும் உண்மையான ஒரே பெண்ணிற்கு
இல்லாதவர்களுக்கு கனவுகளை தந்து கொண்டிருக்கும்
என்னை நோக்கிக்
கைகளை நீட்டி இருக்கும் அவளுக்கு
புன்சிரிப்புடன் நான் வரவேற்புரைக்கிறேன் .
நான் அறியாமை பற்றி சிந்திக்கவில்லை
அறியாமை அரசோச்சுகிறது
ஆம் எனக்கு எல்லாவற்றிலும் நம்பிக்கை இருந்தது
எல்லாவற்றிலும் அவ நம்பிக்கை வந்து விட்டது
வாழ்க்கையில்
மறதி நிலையில்
உறக்கத்தில்
வ்லிவில்
மெலிவில்
என்னை இனி எவரும் அறியார்
என் பெயர் என் நிழல்
இரண்டிலும் ஓநாய்கள் .
நன்றி : எழுவர்சின் ஒரு சர் ரியலிச கவிதை ' ஒரு நம்பிக்கையற்று கிடக்கும் நேரத்தை பற்றி "
என்ன மிஞ்சியிருக்கிறது ?
காலியான அலமாரிகளில் நான் பொய்களை
பொக்கிஷங்களாகப் பாதுகாத்து வைத்துள்ளேன்.
ஒரு பயனற்ற கப்பல்
என் குழந்தை பருவத்தை இணைக்கிறது
என் விளையாட்டுகளை என் களைப் புடன்
என் கனவுகளை நோக்கிய பயணமாக
புயலை என் இரவுத் தனிமையின் உச்சிக்கு
விலங்குகள் அற்ற தீவை நான் விரும்பும் விலங்குகளுடன்
இங்கும் எங்கும் உண்மையான ஒரே பெண்ணிற்கு
இல்லாதவர்களுக்கு கனவுகளை தந்து கொண்டிருக்கும்
என்னை நோக்கிக்
கைகளை நீட்டி இருக்கும் அவளுக்கு
புன்சிரிப்புடன் நான் வரவேற்புரைக்கிறேன் .
நான் அறியாமை பற்றி சிந்திக்கவில்லை
அறியாமை அரசோச்சுகிறது
ஆம் எனக்கு எல்லாவற்றிலும் நம்பிக்கை இருந்தது
எல்லாவற்றிலும் அவ நம்பிக்கை வந்து விட்டது
வாழ்க்கையில்
மறதி நிலையில்
உறக்கத்தில்
வ்லிவில்
மெலிவில்
என்னை இனி எவரும் அறியார்
என் பெயர் என் நிழல்
இரண்டிலும் ஓநாய்கள் .
நன்றி : எழுவர்சின் ஒரு சர் ரியலிச கவிதை ' ஒரு நம்பிக்கையற்று கிடக்கும் நேரத்தை பற்றி "
Friday, March 26, 2010
அழகிய பெரியவன் கவிதைகள்
சொல்லக் கூடாதென்றில்லை
சொல்லக் கூடாத ஒன்றை
எப்படி சொல்ல?
ஆவலுடன் ஓடி வந்து
எடுத்துக்கொள்ள யாருமின்றி
காற்றில் தன சுவையை
கசிந்தபடி
மரத்தை சுற்றிலும்
விழுந்து கிடக்கும்
பனம் பழங்களை போல்
என்னிடமே
வீழ்ந்து கிடக்கின்றன
என்
உள்ளக் கிடக்கைகள்
நன்றி : அழகிய பெரியவன் .
சொல்லக் கூடாத ஒன்றை
எப்படி சொல்ல?
ஆவலுடன் ஓடி வந்து
எடுத்துக்கொள்ள யாருமின்றி
காற்றில் தன சுவையை
கசிந்தபடி
மரத்தை சுற்றிலும்
விழுந்து கிடக்கும்
பனம் பழங்களை போல்
என்னிடமே
வீழ்ந்து கிடக்கின்றன
என்
உள்ளக் கிடக்கைகள்
நன்றி : அழகிய பெரியவன் .
Subscribe to:
Comments (Atom)